2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மக்காவில் பலியானோரின் தொகை 717ஆக அதிகரிப்பு

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாந்த ஹஜ் யாத்திரையின் போது, புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 717ஆக அதிகரித்துள்ளதாகவும் 863க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 1 மில்லியன் மக்கள் இன்று மக்காவுக்கு சென்றிருந்ததாகவும் சனநெரிசலில் நசுங்குண்டே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புனித மக்கா பள்ளிவாசலிலிருந்து 5 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள மினாவில் நடந்த இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டடோரை மீட்கும் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X