Janu / 2026 பெப்ரவரி 26 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
உஹனயிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அம்பாறை, உஹன சமனபெத்த பரிவெனாவிற்கு அருகில் வைத்து வீதியை விட்டு விலகி, மின்சாரக் கம்பத்துடன் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரவியல் பிரிவைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விடுமுறையில் வந்திருந்த குறித்த இராணுவ வீரர், பொலன்னறுவையிலுள்ள தனது சித்தியின் வீட்டிற்குச் சென்று, பின்னர் மஹியங்கனையிலுள்ள தனது பாட்டியையும் பார்த்துவிட்டு, அம்பாறை பொல்வத்தப் பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
புதன்கிழமை (25) அன்று இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதில் படுகாயமடைந்த நபர் அவ்வீதியால் பயணித்த கார் ஒன்றின் மூலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

19 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago