2025 ஜூலை 12, சனிக்கிழமை

மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(வ.கிருஷ்ணா)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தரக் கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று நடைபெற்ற குறித்தப் போராட்டத்தில், அம்மாவட்டத்தில் உள்ள பெண்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்புகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்,  மீண்டும் மீண்டும் விடுதலைக்கானப் போராட்டமா? அரசியல் கைதிகளின் குடும்பங்களின் கண்ணீரை நிறுத்து, அரசே, சர்வதேசமே பாதிக்கப்பட்டப் பெண்களின் அவலக்குரல் கேட்கவில்லையா?, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பதில் கூறுவது யார்? உள்ளிட்ட வாசகங்களடங்கிய பதாதைகளையும் தாங்கியவாரு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .