Editorial / 2025 ஒக்டோபர் 17 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நகரில் வீதியால் செல்வோரை தமது கடைக்கு வாருங்கள் என ஏட்டிக்கு போட்டியாக கூப்பிட்டு வரும் இரு ஆடைகள் விற்பனை வர்த்த நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி 3 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் தொடர்பாக ஒருவரை வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் இருவர் தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நகரில் கோட்டைமுனை பாலத்துக்கு அருகில் உள்ள அருகருகே அமைந்துள்ள இரு ஆடை விற்பனை வர்த்தக நிலையங்களில் முன்னால் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் வீதியால் போவோரை தனது கடைக்கு வருமாறு ஏட்டிக்கு போட்டியாக கூப்பிட்டு வந்தனர்.
இந்நிலையில் சம்பவ தினமான கடந்த புதன்கிழமை (15) பகல் வீதியால் போவோரை கூப்பிடும் போது இரு கடைகளில் பணிபுரிந்துவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து கைகலப்பு ஏற்பட்டது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இதில் இரு தரப்பினரையும் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை (16) ஒருவரை கைது செய்ததுடன் இருவர் தலைமறைவாகியுள்ள தாவும் கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago