Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 டிசெம்பர் 28 , பி.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்தவொரு மதக்கோட்பாடும், மற்றுமொரு மதக்கோட்பாட்டினால் அடிமைப்படுத்தப்படக் கூடாது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் மதக்கோட்பாடுகளை பாதுகாப்பதற்குப் புதிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.
நீர்கொழும்பு 16ஆவது பெனடிக் உயர்கல்வி நிலையத் திறப்பு விழா, 27ஆம் திகதி இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.
இத்தாலி ஆயர் சம்மேளனத்தின் உதவியின்கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உயர்கல்வி நிலையத்தில், சாதாரண தரத்திலும் உயர்தரத்திலும் கல்விகற்ற மாணவர்களுக்கும், ஏற்கெனவே தொழில்புரியும் நபர்களுக்குமான ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிக்கல்வியை வழங்குவதற்கான வசதிகள் காணப்படுகின்றன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் மதக்கோட்பாடுகளை பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதெனத் தெரிவித்தார்.
வர்த்தக சமூகத்துடன் சீர்கெட்டுள்ள ஒட்டுமொத்த சமூகத்தை குணப்படுத்துவதற்கு மதக்கோட்பாடுகளைப் போன்றதோர் உயரிய கோட்பாடுகள் எதுவும் கிடையாதெனவும் ஜனாதிபதி; இங்கு குறிப்பிட்டார்.
தனது அறிவு, ஞானம் மற்றும் அனுபவம் ஆகியவற்றை தனிப்பட்ட வாழ்வுக்காகவும் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் நலனுக்காகவும் பயன்படுத்துதல் அனைவரினதும் பொறுப்பாகுமென அவர் சுட்டிக்காட்டினார்.
21 minute ago
30 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
42 minute ago
51 minute ago