2026 மார்ச் 12, வியாழக்கிழமை

’மத்திய கிழக்கில் இந்தியர்களை தவிக்க விடமாட்டோம்’

Freelancer   / 2026 மார்ச் 12 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா இப்போது தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, போர் குறித்த நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேற்கு ஆசியா முழுவதும் வாழும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களுக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறோம்.

தற்போதைய பதற்றங்களின்போது வளைகுடா நாடுகள், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றன. அதற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

தற்போதைய மேற்கு ஆசிய நெருக்கடியில் அரசியல் விளையாடுகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை அரசியலாக்கக் கூடாது என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .