2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மோதரையில் 10 கைக்குண்டுகள் மீட்பு: நீதவான் அதிரடி உத்தரவு

Editorial   / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோதரை (முகத்துவாரம்)  அளுத் மாவத்தை பகுதியில் உள்ள நகராட்சி வேலைத்தளத்துக்கு  அருகில்   ஒரு பாடசாலை பையில் இருந்து கைப்பற்றப்பட்ட 10 கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்து, அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகாரா மகாராச்சி மோதரை பொலிஸாருக்கு புதன்கிழமை (01) உத்தரவிட்டார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சிறப்பு பொலிஸ் குழு முன்வைத்த உண்மைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

சந்தேக நபர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

 

முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு, குண்டுகளை செயலிழக்கச் செய்ய அனுமதி மேலதிக கூடுதல் நீதவான், அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையை பெறுமாறு உத்தரவிட்டார்.

 

விசாரணையின் முன்னேற்றத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அவர் மோதரை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X