2021 மே 14, வெள்ளிக்கிழமை

’மதரஸாக்களில் கற்பிக்க விசா வழங்கப்படவில்லை’

Editorial   / 2021 மார்ச் 09 , மு.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, முழுமையாக வாசிக்குமாறு கோரிநின்ற கல்வியமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தபோது, மதரஸாக்களில் கற்பிப்பதற்கு வெளிநாட்டவர்களுக்கு விசாக்கள் வழங்கப்படவில்லை என்றார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதெனத் தெரிவித்த அவர், அவ்வறிக்கையில் ஓரிடத்தில் மட்டுமன்றி, பெரும்பாலான இடங்களில், தெரிந்துகொண்டே நல்லாட்சி அரசாங்கம் அதைத் தடுப்பதற்குத் தவறிவிட்டதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்இ தாக்குதல்களைத் தடுக்க முயற்சித்து இருக்கலாம்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். 

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதற்கு இடமளித்திருக்க மாட்டோமெனத் தெரிவித்த அவர், எமது ஆட்சியில் செயற்றிறன் மிக்க புலனாய்வுப் பிரிவு இருந்தது' என்றார்.
அப்போது, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, விசா கோரி விண்ணப்பிப்பவர்களின் பின்புலங்களைத் தேடி ஆராயும் நடைமுறையைப் பின்பற்றினார். அதற்காக, குழுவொன்றையும் நியமித்திருந்தார் எனத் தெரிவித்த ஜி.எல். பீரிஸ், ஆகையால்தான், மதரஸாக்களில் கற்பிப்பதற்காக விசாக்கள் வழங்கப்படவில்லை என்றார். 

'உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் மீது, மூன்று நாள் விவாதத்தை நடத்துவதற்கு, அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் தான் அனைத்து விடயங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .