Mayu / 2026 மே 05 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே 4, 2026) வெளியான நிலையில், தனது பதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (05) முறைப்படி ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், தனது ராஜினாமா கடிதத்தைக் கையளித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து, ஜனநாயக மரபுகளின்படி அவர் இந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால முதலமைச்சராகத் தொடருமாறு ஆளுநர் அவரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. "மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம்; ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்" எனத் தனது தேர்தல் தோல்விக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago