2025 ஜூலை 05, சனிக்கிழமை

'மதுஷை இலங்கைக்கு அழைத்து வருவதில் அரசியல்வாதிகள் சிலர் தடை'

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட பாதாளக் குழுவினரை இலங்கைக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெதிராக  இலங்கையின் சட்டதிட்டங்களைப் பிரயோகிக்க அரசியல்வாதிகள் சிலர் இடமளிக்கவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று மாவன்னெல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதுஷுக்கு எதிராக சரியான முறையில் சட்டம் நிறைவேறும் என எம்மால் கூற முடியாது. ஏனெனில் இவரைப் போன்ற பல போதைப் பொருள் வர்த்தகர்கள் இதற்கு முன்னரும் இலங்கையில் கைதுசெய்யப்பட்ட போதிலும் அவர்களுக்கு எதிராக சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை. எனவே மதுஷும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் இந்த நிலையே ஏற்படும்.

அத்துடன் டுபாயில் வழங்கப்படும் தீர்ப்பு இலங்கையை விட சிறந்தது என்பதுடன் மதுஷ் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் அவரைக் காப்பாற்ற இலங்கையின் அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .