2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

முந்தல் திருமணத்தால் 100 பேர் தனிமை

Editorial   / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. ஹிரான் பிரியங்கர

முந்தல்- கொத்தன்தீவு பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி, திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மணமகன், மணமகள் உள்ளிட்ட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, முந்தல் வைத்திய சுகாதார பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுள் 10 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொத்தன்தீவு வைத்தியசாலைக்கு அருகிலேயே இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்தாகவும், இதில் கலந்துகொண்ட எவரும் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண நிகழ்வை சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்த போது, பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த வாரமும் குறித்த பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறி பல திருமண நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்தாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .