2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கத்தில் தந்தை பலி

Editorial   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல் வயலில் மின்னல் தாக்கத்தினால்  மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் (வயது 53) உயிரிழந்துள்ளதாக கஹடகஸ்டிகிலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரத்மலை, உப்புல்தெனியவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குணசேனகே உபாலி சமரவிக்ரம (53) என்பவரே உயிரிழந்துள்ளார்.

ரத்மலையில் உள்ள நெல் வயலில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த தனது மாடுகளை  வீட்டிற்கு கொண்டு வருவதற்காக கனமழை பெய்த போதிலும் வயலுக்குச் சென்றபோது அந்த நபர் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மின்னல் தாக்கத்தினால் பலத்த தீக்காயங்களுக்கு ஆளான நபர் தம்மன்னாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X