Freelancer / 2026 ஜனவரி 17 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி நேற்று (16) இரவு கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இடம்பெற்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
களனி - பியகம வீதியில் அசோக ரன்வலவின் மனைவி செலுத்திய காரை வீட்டிற்குள் செலுத்த முற்பட்டபோது, களனி திசையிலிருந்து வந்த மற்றுமொரு கார் அந்தக் காரில் மோதியுள்ளது.
விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் இரவுப் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த விபத்து குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய மற்றைய காரின் சாரதி களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மது அருந்தியிருந்தமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த அசோக ரன்வலவின் மனைவி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.R
1 hours ago
6 hours ago
7 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
7 hours ago
17 Jan 2026