Editorial / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசத்தில் குடும்பத் தகராறில் மனைவியைக் அடித்துக் கொன்றுவிட்டு, இரண்டு நாட்களாகச் சடலத்துடனேயே கணவன் தங்கியிருந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் தாபர் (38). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்த ஜெகதீஷ், ரீமாபாய் (25) என்ற உறவுக்காரப் பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஜெகதீஷுக்கும் ரீமாபாய்க்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு, உணவு சமைப்பது தொடர்பான விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், வீட்டிலிருந்த கட்டை ஒன்றால் ரீமாபாயை சரமாரியாகத் தாக்கினார். பலத்த காயமடைந்த ரீமாபாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு எந்தவிதப் பதற்றமும் இன்றி, ரீமாபாயின் உடலைக் கட்டிலில் கிடத்திய ஜெகதீஷ், தானும் அதன் அருகிலேயே படுத்துத் தூங்கியுள்ளார். சுமார் இரண்டு நாட்களாக மனைவியின் சடலத்துடனேயே அவர் பொழுதைக் கழித்துள்ளார். அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இவர்களது இரண்டு குழந்தைகளும் அதே வீட்டில்தான் இருந்துள்ளனர்.
இந்த விபரீதம் குறித்து ஜெகதீஷின் தந்தை காவல்துறைக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரீமாபாயின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெகதீஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவியைக் கொன்றுவிட்டு பிணத்துடன் தங்கியிருந்த இந்தக் கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
4 minute ago
20 minute ago
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
26 minute ago
38 minute ago