2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகளை புளோரிடாவுக்கு அனுப்ப அனுமதி

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மனித எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனைக்காக, அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்துக்கு அனுப்புவதற்கான அனுமதியை, மன்னார் நீதவான்  வழங்கியுள்ளார்.

மிகவும் முக்கியமான எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்களை, குறித்த ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அகழ்வுப் பணியானது, ராஜபக்ஸவின் தலைமையில், மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் 98ஆவது நாளாக நேற்று (31) தொடர்சியாக இடம்பெற்றது.   

இதுவரை 216 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 209 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .