2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மரணதண்டனை விதிக்கப்பட்டோரின் விவரங்கள்

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளன.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 20 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியிலை, சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் பிரகாரம், சிங்களவர்கள் 4 பேரும், தமிழர்கள் 8 பேரும் முஸ்லிம்கள் 8 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.  

இதில் முதற்கட்டமாக, இரண்டு சிங்களவர்களுக்கும் தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் என, ​மொத்தம் நால்வருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

குறித்த பட்டியலுக்கு அமைய, எம்.கே.பியதிலக்க, எம்.தர்மகரன், எம்.எஸ்.எம்.மஸ்தார், ஜே.ஏ.பூட், பி.ஜே.போல்சிம், எஸ்.புண்ணியமூர்த்தி, கே.எம்.சமிந்த, எஸ்.கணேசன், டபிள்யு.விநாயகமூர்த்தி, எஸ்.ஏ.சுரேஷ்குமார், எம்.குமார், எஸ்.மசார், டபிள்யு.ரங்க சம்பத் பொன்சேகா, எஸ்.முஹம்மது ஜான், பெருமாள் கணேசன், ஆர்.பி.சுனில் கருணாரத்ன, சையித் முகமது உவைஸ், எம்.எஸ்.எம்.மிஸ்வர், பி கமிலஸ் பிள்ளை, ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல் ஆகியோருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .