2025 மே 02, வெள்ளிக்கிழமை

மரண அச்சுறுத்தல்; கைதியை ஆஜர்படுத்த உத்தரவு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தபோது வைத்தியருடன் இருந்த கைதியை எதிர்வரும் 25ஆம் திகதி ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று (23) உத்தரவிட்டார்.

கைதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை பதிவு செய்யுமாறு பொரளை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

புதிய மெகசீன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன், கடந்த 15ஆம் திகதி தன்னைத் திட்டியதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தாகவும்   வைத்தியரான பிரியங்க இந்துனில் புபுலேவெல வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில்  பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X