Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
சிறுவர்கள் மற்றும் மகளிர் சமூகத்தை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சும் ஒன்றிணைந்து ஒரு தேசிய ஒருங்கிணைப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இதனை மீறுவோருக்கு மரண தண்டனை வழக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர் சந்திரானி பண்டார, நேற்று செவ்வாய்க்கிழமை (15) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'சிறுவர்களுக்கும் மகளிருக்கும் எதிராக இடம்பெறும் துஷ்பிரயோகங்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்காகவே நாம் இவ்வாறானதொரு திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதையும் மீறி தவறுகள் நடைபெறுமாயின், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும்' என்று அவர் கூறினார்.
மேலும், துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதற்கு தேசிய அரசாங்கம் அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
51 minute ago