2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளி படுக்கையை சேதப்படுத்திய காட்டு யானை

Editorial   / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை, ஒரு ஜன்னலை உடைத்து, நோயாளிகள் வைத்திருந்த  பொருட்களை வெளியே எடுத்து உண்டதுடன்,  படுக்கை மற்றும் இரும்புப் பெட்டியை சேதப்படுத்தியுள்ளது.

ஊழியர்கள் கூச்சலிட்டு, அந்த காட்டு யானையை விரட்டியடித்ததாகக் கூறினர். காட்டு யானைகள் அடிக்கடி மருத்துவமனையைத் தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும், இதனால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மருத்துவமனையைப் பாதுகாக்க மின் வேலி அமைக்க வேண்டும் என்ற தங்கள் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அதிகாரிகள் காது கேளாதவர்களாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X