J.A. George / 2022 மார்ச் 09 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் நேற்று முதல் மருந்தகங்களுக்கு மருந்து விநியோகிப்பதை நிறுத்த ஆலோசித்து வருவதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் (ACPPOA) தலைவர் சண்டிக கன்கந்த தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கியின் ரூ. 230க்கு உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மருந்து நிறுவனங்களும் இறக்குமதியாளர்களும் தங்களிடம் உள்ள இருப்புகளில் இருந்து மருந்தகங்களுக்கு விநியோகிப்பதை ஏற்கெனவே நிறுத்திவிட்டதாக அவர் டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
ரூபாய் மதிப்பீட்டின் பின்னர், அந்த மருந்து விற்பனையாளர்கள் இலாபம் ஈட்ட முடியாது. பெரும்பாலான மருந்து வகைகள் மற்றும் பொருட்கள் கடனுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் கூறினார்.
எனவே, குறைந்த விலையில் அவற்றை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யும் போது உற்பத்தியாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் பாரிய நட்டத்தை சந்திக்க நேரிடும் என கங்கந்த தெரிவித்தார்.
"நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடியால், உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாத நிலையில் உள்ளனர்.
ஏனெனில், அவர்கள் இறக்குமதி செய்யும் சில மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டால், அவற்றை உள்ளூரில் விற்க முடியாது. சந்தையில் பெரும்பாலான மருந்துகள் கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படுகின்றன,'' என்றார்.
எனினும், மருந்துகளின் விற்பனை விலையை உயர்த்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மருந்து விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.
நாட்டில் மருந்துப்பொருட்கள் இல்லாமல் போனால், நாட்டில் எரிபொருள் மற்றும் பால் மா தட்டுப்பாடு போன்று அது மற்றுமொரு முக்கிய பிரச்சினையாக இருக்கும் என கங்கந்த மேலும் தெரிவித்துள்ளார்.
7 minute ago
45 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
45 minute ago
48 minute ago
59 minute ago