2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மர்ம முதலீட்டாளரை நாடுவது வங்குரோத்தை காட்டுகிறது

Gavitha   / 2016 ஜனவரி 14 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாயின் பெறுமதியைப் பேணுவதற்காக, மர்மமான முதலீட்டாளரிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ள நிதியமைச்சு மேற்கொண்ட நடவடிக்கை, எவ்வகையிலும் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்த கூட்டு எதிரணி, இது, அரசாங்கத்தின் பரிதவிக்கும் நிலையையும் வங்குரோத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாக நேற்று புதன்கிழமை(13) கூறியது.

இந்த நடவடிக்கை, பொருளாதாரத்துக்குப் பாதகமானது மட்டுமன்றி, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது என, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சு, முதலீட்டாளரின் பெயரை மறைத்துள்ளது. முதலீட்டாளர், இந்தப் பணத்தை எவ்வாறு உழைத்தார் என்பதையிட்டு, தாம் கவலைப்படவில்லையென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகின்றார்.

இந்தப் பணம், கறுப்புப் பணமாக, போதைப்பொருள் பணமாக அல்லது பயங்கரவாத இயக்கப் பணமாக இருக்க முடியும். அவற்றில் முதலீடு செய்வதனால், எமது பொருளாதார நரம்பு மையத்தின் உள்ளே, வெளிச்சக்திகள் ஊடுருவ முடியும் என அவர் தெரிவித்தார்.

பொரளையிலுள்ள டொக்டர் என்.எம். பெரேரா மையத்தில், நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலளர் மாநாட்டிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

டிசெம்பரில், இந்த முதலீட்டாளரால் 500 மில்லியன் அமெரிக்க டொலர் அனுப்பப்பட்டது. மீதி, இந்த மாத முடிவில் பெறப்படும் என அவர் கூறினார்.

இந்த நிதியின் ஒரு பகுதி, பெல்ஜியத்திலுள்ள வங்கியால் அனுப்பப்பட்டது. மீதி,
லக்ஸம்பேர்க் வங்கியொன்றால் அனுப்பப்பட்டது. இந்த நிதியில் சந்தேகம் கொண்டவர்கள், நீதிமன்றத்துக்குப் போகலாம் என அமைச்சர் கூறுவது அர்த்தமற்றது என அவர் தெரிவித்தார்.

இந்த நிதி மீது, அரசாங்கத்துக்குக் கட்டுப்பாடு இல்லை. இந்த அரசாங்கத்தின் வங்குரோத்தை இது, உலகுக்குக் காட்டுகிறது. இது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்' என அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X