Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையிடம் (NLDB) உள்ள காணிகளை விற்பனை செய்வதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுளள மனு தொடர்பான விவாதம் இன்று (01) முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கைத்தொழில் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தினால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை கமக்காரர்கள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையிடம் உள்ள காணிகள் இலங்கையின் பெறுமதிமிக்க வளங்கள் ஆகும். நாட்டை கட்டியெழுப்புவதற்கு இந்த வளங்களில் இருந்து பயன்பெறுவதற்கான வளர்ச்சியடைந்த வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கிறது. அதற்காக இந்த வளங்களை பாதுகாக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025