2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் சுனாமி ஒத்திகை நிகழ்வு

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமி அனர்த்த ஆபத்துள்ள 06 பாடசாலைகளில், சுனாமி ஒத்திகை நிகழ்வு,  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களிலிருந்து எச்சரிக்கை விடப்பட்டு பாடசாலை மாணவர்களை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தும் ஒத்திகையும் இதன்போது நடைபெற்றது.

இந்நிழ்வின்போது முல்லைத்தீவு மகா வித்தியாலயம், மு.இந்து தமிழ் கலவன் பாடசாலை, கள்ளப்பாடு அ.த.க பாடசாலை, உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயம், சிலாவத்தை தமிழ் வித்தியாலயம், ஆகியவற்றிலிருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பிரதான இடைத்தங்கல் முகாமாக பிரகடனப்படுத்தப்பட்ட முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகளீர் பாடசாலையில் ஒன்றுசேர்க்கப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம், வலயக் கல்விப்பணிமனை ஆகியவற்றிலிருந்து பிரதான ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X