2025 நவம்பர் 25, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் துப்பாக்கிச் சூடு: இராணுவ வீரர் படுகாயம்

Editorial   / 2025 நவம்பர் 25 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, கொக்காவில் 4 இல் உள்ள இராணுவ ஆயுதப் புலனாய்வுப் படை முகாமில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இராணுவ வீரர் தெஹியத்தகண்டியாவைச் சேர்ந்த 36 வயதுடைய இராணுவ வீரர் ஆவார்.

இராணுவ வீரர் தன்னிடம் இருந்த T-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொள்ள முயன்றாரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X