2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முல்லைத்தீவில் 230 முன்பள்ளி மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய ’தாயகம்’ வானொலியின் அன்பளிப்பு

Simrith   / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து 24 மணி நேரம் ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலியின் 'ஒன்றாய் இணைவோம்' திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30.09.2025) முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை பிரதேசங்களில் இடம்பெற்றன.

நிகழ்வில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா, பிரதேச சபை உறுப்பினர் ஞா. ஜூட்சன், சமூக ஆர்வலர்களான இ. தயாபரன், ப.சிறீதரன், வற்றாப்பளை மற்றும் கேப்பாபுலவு கிராம சேவையாளர்கள், பங்குத்தந்தை, முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சிறுவர் தினத்தினையொட்டி கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான ஞா.ஜூட்சனின் வேண்டுகோளையடுத்து, 'தாயகம்' வானொலியின் இயக்குநர் விஜய் இராஜகோபால் வழங்கிய நிதி உதவியின் ஊடாக 10 முன்பள்ளிகளைச் சேர்ந்த 230 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வன்னி பிரதேசத்தில் பல்வேறு சமூக உதவித் திட்டங்களை 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவை வானொலி தொடர்ந்து முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X