2024 ஜூலை 27, சனிக்கிழமை

மலாவி நாட்டு துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்

Freelancer   / 2024 ஜூன் 11 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் நேற்று காலை புறப்பட்ட மலாவி பாதுகாப்பு படை விமானம், ரேடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன” என்று மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

விமான நிபுணர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 9:17 மணியளவில் விமானம் புறப்பட்டு, காலை 10:02 மணிக்கு Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்டப்படி தரையிறங்க வேண்டும், ஆனால் விமானம் அப்படி இல்லாமல், ரேடாரில் இருந்து விலகியது.

மேலும் இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .