2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மிஸ் தனுஷி அமயா இந்தியாவுக்கு புறப்பட்டார்

Editorial   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி.கபில 

 இந்தியாவில் நடைபெறும் 08வது மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த மிஸ் தனுஷி அமயா, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை (23) அன்று இரவு புறப்பட்டார்.

இந்தப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை (24) முதல் செப்டெம்பர் ​(01) வரை இந்தியாவின் புதுடெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது, இதில் உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 40 அழகிகள் பங்கேற்கின்றனர்.

 

பள்ளிப் பருவத்தில் இருக்கும் 14 வயதுடைய தனுஷி அமயா, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகின் முன்னணி அழகுப் போட்டிகளில் ஒன்றான இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

 

தனுஷி   சனிக்கிழமை (23) அன்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-1174 மூலம் இந்தியாவின் புதுடெல்லிக்கு புறப்பட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X