Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மார்ச் 21 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயற்படுத்தத் தவறிய நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தியும் அவருக்கு தண்டனை வழங்குமாறு கோரியும் உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக நிதியமைச்சின் செயலாளரை தண்டிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து பிறப்பிக்கப்பட இடைக்காலத் தடை உத்தரவை அவமதித்தமை குறித்தே இந்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை,உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சிறிவர்தன செயற்படத் தவறியதாக குற்றம் சுமத்தி தேசிய மக்கள் சக்தியின் பாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
39 minute ago
2 hours ago