2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மஹிந்தவின் புதுக்கட்சியின் பெயருக்கு 11,622 பரிந்துரைகள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதியக் கட்சிக்கான பெயர், எதிர்வரும் வாரத்துக்குள் தேர்தெடுக்கப்படும் என்று இணைந்த எதிரணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த புதிய கட்சிக்காக மின்னஞ்சல் மூலம் 4,622 பெயர்களும் அஞ்சல் மூலம் 7,000 பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றிலிருந்தே புதிய கட்சிக்கான பெயர் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் இதன் பின்னர் இந்தக் கட்சி நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதிக்குள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .