2025 மே 19, திங்கட்கிழமை

மஹிந்தவை விசாரணைக்கு அழைப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயாதீன தொலைக்காட்சிக்கு நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் முள்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஆறு பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தனது விளம்பரங்களை விளம்பரப்படுத்தி சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு 115 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதுடன், ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரத்தை விளம்பரப்படுத்தாமல் இருப்பதற்காக 87 இலட்சம் ரூபாவை மீளச் செலுத்தி சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. 

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன, பொது முகாமையாளர் அருண மூர்த்தி விஜேசிங்க, பிரதி முகாமையாளர் உபுல் ரஞ்சித் ஆகியோரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் 15 - 16 மற்றும் 29 - 30 ஆகிய தினங்களிலேயே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி அணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள 800 முறைப்பாடுகளில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் இரண்டாவது முறைப்பாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X