Niroshini / 2021 மே 07 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டுள்ள அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகத் தெரியவருகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, இது விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதென்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்ததல்லவென, ஆளுந்தரப்பின் கட்சித் தலைவர்கள் சிலர், இக்கூட்டத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளனர் என்று தெரியவருகிறது.
அத்துடன், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதென்பது, பாரிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதால், தொற்றுப் பரவல் நிலை ஓய்ந்தவுடன், தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்துவதென்றும், கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
21 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago