Janu / 2026 மார்ச் 12 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ரோயல் கல்லூரியின் 15 வயதுடைய மாணவன் ஒருவன், பாடசாலை வளாகத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை (11) காலை 7:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹோகந்தர பகுதியை சேர்ந்த குறித்த மாணவன், கட்டிடத்தின் மேல் மாடியில் பூட்டப்பட்டிருந்த வகுப்பறை ஒன்றிற்குள் ஜன்னல் வழியாக நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமையர் கல்லூரிக்கு இடையிலான வருடாந்த "பிக் மேட்ச்" (Big Match) கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் கலந்துகொள்வதற்காக மாணவர்கள் சென்றிருந்ததால், அந்த வகுப்பறை பூட்டப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவன் தனது பாடசாலை பையை தோளில் சுமந்தபடி வகுப்பறைக்குள் ஏற முயன்றபோது, திடீரென வழுக்கி தரையில் விழுந்துள்ளார். இதன்போது கட்டிடத்திற்கு அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்றும் முறிந்து அவரோடு கீழே விழுந்துள்ளதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
படுகாயமடைந்த மாணவன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
8 hours ago
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
14 Mar 2026
14 Mar 2026