R.Maheshwary / 2021 மே 30 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை மீறியமை, முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை தொடர்பில் நேற்றைய தினம் 914 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மார்ச் 18ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையான 14 மாதங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் நேற்றைய தினமே அதிகளவானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதில் அதிகமானவர்கள் மாத்தளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய மாத்தளையில் 171 பேரும் நிக்கவரெட்டியவில் 116 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் நேற்று வரை 17,300 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .