Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மாமியாரைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் இரத்தின புரி - டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
74 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
இரத்தினபுரி - டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பொலிஸாரின் விசாரணைகளில், மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான 29 வயதுடைய மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
35 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
47 minute ago
56 minute ago