2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’மார்ச் 1 - 15க்குள் இலங்கை வந்தவரா நீங்கள்?’

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில், ஐரோப்பா, ஈரான், தென்கொரியா போன்ற நாடுகளிலிருந்து நாட்டுக்குள் வந்தவர்கள் இருப்பின், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

உங்களதும் சமூகத்தினதும் நலனுக்காக, இந்தப் பதிவை மேற்கொள்ள வேண்டுமென்றும் இல்லாவிடின், 119 என்ற மத்திய நிலையத்துக்கு உடனடியாக அழைப்பை ஏற்படுத்தியோ பதிவை மேற்கொள்ள வேண்டுமென்றும், அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, தொற்றுத் தடைக்காப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும், அமைச்சு எச்சரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .