Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர கொண்டு வந்த மின்சார சட்டத்தை செயற்படுத்தினால் மின்சார சபையின் 23,000 சேவையாளர்களின் எண்ணிக்கையை 12 000ஆக குறைக்கும் சூழலே காணப்பட்டது. புதிய சட்டமூலத்தில் மின்சார சபையின் சகல ஊழியர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) அன்று இடம்பெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர்பேசுகையில்,
மின்சாரத்துறை தொடர்பில் கடந்த காலங்களில் கொண்டு வந்த சட்டங்களுக்கு ஜே .வி.பி. எதிர்ப்பு தெரிவித்தது என்று கூறுவதனை ஏற்க முடியாது. 2002ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மின்சாரத்துறை தொடர்பான சட்டமூலங்களை எதிர்த்ததால் தான் மின்சார சபையின் தனியுரிமை பாதுகாக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையை 12 நிறுவனங்களாகக் கூறுபடுத்தும் வகையில், சட்டமூலத்தை கொண்டு வந்தார் .இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். இருப்பினும், அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சன விஜேசேகர கொண்டு வந்த மின்சார சட்டத்தைச் செயற்படுத்தினால் இலங்கை மின்சார சபையின் தனியுரிமை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பல்வேறு பகுதியாகக் கூறுபடுத்தப்படும். இதனைத் தடுக்கும் வகையில் தான் புதிய திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .