2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மின்வெட்டு நேரம் குறையும் சாத்தியம்?

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கி நேற்று இரவு முதல் இயங்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

அதற்கமைய, தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அடுத்த வாரம் முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் மின்வெட்டு நேரம் குறையும் சாத்தியம் உள்ளதாகவும் இலங்கை மின்சார சபை வட்டாரங்களின் மூலம் அறியமுடிகிறது.

கடந்த 15ஆம் திகதி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி திடீரென செயலிழந்ததை அடுத்து, அதற்கு முன்னர் வரை 1 மணிநேரமாகக் காணப்பட்ட நாளாந்த மின்வெட்டு 3 மணிநேரமாக அதிகரிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .