2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மிளகாய் பொடியை வீசி கொள்ளையடித்த குடும்பம் சிக்கியது

Janu   / 2025 ஜூலை 01 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிள்களில் தனியாகச் செல்லும் பெண்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்த ஒரு தாய், தந்தை மற்றும் மகன்  மஹாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வாரியபொல, பாதெனிய பிரதேசத்தில் வைத்து  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது தப்பியோடிய தந்தை தலதாகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முப்பத்து மூன்று வயதுடைய தாய், பதினைந்து வயதுடைய மகன் மற்றும் தாயின் இரண்டாவது திருமணத்தின் கணவனான இருபத்தி இரண்டு வயதுடைய இளைஞன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.   

கைது செய்யப்பட்ட பெண் ஐந்து மாத கர்ப்பிணி என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .