2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

‘மீண்டும் கிளர்ந்தெழும் குப்பை பிரச்சினை’

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஸ்மின், ஹிரன் பிரியங்கர

புத்தளம்- அருவக்காடு பகுதியில், குப்பைகள் கொட்டப்படுவதால், சூழல் மாசடைவதாகத் தெரிவித்து, காரைத்தீவு, சேராக்குளி மக்கள் நேற்று (28) வணாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றதையடுத்து, அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், புத்தளம் அருவக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, கழிவு  முகாமைத்துவ நிலையத்தில் கொட்டப்படுவதால், அங்கு துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த சுமார்  200 க்கும் மேற்பட்ட மக்கள், முறைப்பாடு செய்வதற்காக, பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்றுள்ளனர்.

எனினும், மக்களின் முறைப்பாட்டை பொலிஸார் ஏற்க மறுத்ததையடுத்து, அங்கு  அமைதியின்மை நிலவியுள்ளது.  இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு  வருகைதந்த வணாத்திவில்லு பங்குத்தந்தை கிறிஸ்டி பெரேரா,  பொலிஸாரிடம் மக்களுடைய நிலைப்பாட்டை எடுத்துக்௯றியதன் பின்னர், பொலிஸார் மக்களுடைய முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .