2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மீண்டும் சிறைக்கு சென்றார் ரஞ்சன்

Freelancer   / 2021 ஜூலை 25 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும்  அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்ட ரஞ்சன் எம்.பி, வைத்தியசாலையின் உடற்பயிற்சி பிரிவில் ஏறக்குறைய ஒரு மணி நேரம்  சிகிச்சை பெற்றுக்கொண்ட பின்னர், மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்

மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பியான துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியதோடு, அவரை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக 
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, நியமித்ததைப் போலவே, ரஞ்சன் எம்.பிக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என ரஞ்சன் ராமநாயக்கவின் வருகைக்காக வைத்தியசாலையில் காத்திருந்த பராளுமன்ற உறுப்பினர் எம்.பி. திலீப் வெதஆராச்சி, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .