Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று நாள்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் திகதி இராமேஸ்வரம் வருகை தர உள்ளார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை மூன்று நாள்கள் கடலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாம்பன் மன்னார் வளைகுடா மற்றும் பாம்பன் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை பாம்பன் குந்துக்கால் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்துமாறும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
6 hours ago
30 Apr 2025