2025 ஜூலை 12, சனிக்கிழமை

முகக் கவசங்களை அணிவது கட்டாயம்

Editorial   / 2020 மார்ச் 14 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சகல சிறைசாலைகளுக்குள்ளும் பணியாற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் சகலரும் முகக் கவசங்களை அணிய வேண்டியது கட்டாயமென அறிவிக்கப்பட்டுள்ளது.

​நேற்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பபு  அ​ழைப்பிக்கப்பட்ட போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சிறைசாலைகளில் காணப்படும் துணிகளை கொண்டு முகங்களை மறைத்துகொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.

அதற்காக ஒவ்வொரு சிறைசாலைக்கும் 100 மீற்றர் அளவான துணி வகைகள் பகிரப்பட்டுள்ளதுடன், சிறைக் கைதிகளின் உதவியுடன் அவற்றை முகக் கவசங்களுக்கு ஏற்றவாறு தயார் படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் சகல சிறைக் கைதிகளும் சிறைகளுக்குள் நுழையும் முன்பாக கைகளை நன்கு கழுவ வேண்டியது அசியமெனவும், வெ ளிநாட்டவர்கள் அதிகம் நடமாடிய பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளுக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .