Freelancer / 2023 ஏப்ரல் 28 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வான மாவீரர் நிகழ்வு தொடர்பான பதிவினை முகநூலில் பதிவிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 28.11.2020 ஆம் திகதி அன்று வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஒரு வருடமும் 5 மாதங்கள் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.பின்னர் 07.03.2022.ஆம் திகதியன்று நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். வியாழக்கிழமை (27) வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago