J.A. George / 2021 ஜனவரி 21 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று(21) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று காலை 07.40 மணியளவில் ஓமானில் இருந்து வணிக விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ஓமான் விமான சேவைக்கு சொந்தமான டபிள்யூ.வை.371 என்ற விமானமே இவ்வாறு நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் வருகைதந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .