Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சித்திரை புத்தாண்டுக்கு முன்பே தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்திருந்தோம். பாதீட்டு திட்டம் மீதான விவாதம் இடம்பெறுவதனால் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.
இதன்படி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதியை அறிவித்தது. அதற்கமைய தேர்தல் மே மாதம் நடத்தப்படவுள்ளது.
எனவே, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு அமைய, உரிய முறையில் தேர்தல்கள் ஆணைக்குழு திகதியைத் தீர்மானித்திருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும்.
தொடர்ந்தும் தேர்தலை நடத்திக் கொண்டிருப்பதற்கு நேரத்தைச் செலவிட முடியாது.
எனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிக்கு அமைய, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பாரிய வேலைத்திட்டங்களைச் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெவ்வேறு நிபந்தனைகள் காரணமாக எம்மால் பணியாற்ற முடியாமல் உள்ளது என்றார். (a)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago