Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 01 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய மீன்பிடி படகானது, இந்தியாவுக்குரியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்தினம் (30) முல்லைத்தீவு கடற்கரையில், சேதமடைந்த நிலையில் கரையொதுங்கிய இப்படகு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படகானது இந்தியா – ஆந்திரா மாநிலத்துக்குரிய மீனவப்படகென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த படகிலிருந்து அலைப்பேசிகள் மற்றும் மீனவத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு குறித்த படகானது, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருக்கும் வேளையில் விபத்துக்குள்ளாகியிருக்கலாமென்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு, இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
05 Jul 2025