Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுளம்புக் குடம்பிகளை அடையாளம் காண பொலிஸ் நாய்ப்பட்டி பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய்களான ஜொனி மற்றும் ரோமாவுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இலங்கை பொலிஸில் 200 மோப்ப நாய்கள் இருப்பதாகவும், அவை, குற்றங்களை விசாரிக்கவும் சந்தேக நபர்களை அடையாளம் காணவும் வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறியவும் பயன்படுத்துத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குற்றங்களைத் தடுக்க அவற்றைப் பயன்படுத்த பட்டிகளில் பயிற்சி அளிக்கப்படுவதோடு, நுளம்புக் குடம்பிகளைக் கண்டறிய கண்டி நாய்ப்பட்டி பிரிவின் பொலிஸ் மோப்ப நாய்களான ஜொனி மற்றும் ரோமாவுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகளால் நடத்தப்படும் பல்வேறு தேடுதல்கள் மற்றும் சோதனைகளின் போது மோப்ப நாய்களின் உதவி பெறப்படும் என்று சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அவற்றைப் பயன்படுத்த எதிர்காலத்தில் இன்னும் பல மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago