2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

முகத்தை பதம்பார்த்த கம்பி அகற்றப்பட்டது

George   / 2016 ஜனவரி 19 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்தை பதம்பார்த்து வெளியேறி கம்பியை, இரண்டு மணிநேர சத்திரசிகிச்சையின் ஊடாக வைத்தியர்கள் அகற்றிய சம்வமொன்று கம்பளை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கம்பளை, உலப்பனையிலிருந்து பல கிராமங்களுக்கு செல்லும் பாதுகாப்பற்ற படிகற்கள் அடங்கிய வீதியில் பயணித்த உலப்பனை, தெம்பிலிகல தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான வீ. அண்ணாமலை (வயது 47), காலிடறி கீழே விழுந்துள்ளார்.

அவர், சுமார் 20 அடி பள்ளத்தில் நிர்மாணித்துகொண்டிருக்கின்ற மாடிக்கட்டிடத்திலே விழுந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தொடர்பில் கவலைக்கொள்ள வேண்டிதில்லை என்று தெரிவித்த வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் 4 அடி கம்பியுடனேயே அவர், வைத்தியசாலைக்கு லொறியின் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X