2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முக்கொலை சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுகம்பளை பிரதேசத்தில் வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு பாதங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரை, நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றபுலனாய்வுத் துறை அதிகாரிகள் முன்னெடுத்த விசேட  நடவடிக்கையை அடுத்து, பஸ்யாலை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் நேற்று திங்கட்கிழமை (14)  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், குறித்த வீட்டில் இருந்த கோழிப் பண்ணையில் பணிபுரிந்தவர்  என்பதுடன் வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகிய மூவரையும் கொலை செய்திருந்ததுடன் வீட்டிலிருந்த வாகனத்தை எடுத்துகொண்டு தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X