Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில காமுகர்களின் இச்சைகளினால் சேயா அநியாயமாக கொல்லப்பட்டமை பெரும் கொடிய செயலாகும் . அவ்வாறே இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனிடம் முழுமையான விசாரணைகள் நிறைவடைவதற்குள் அவனை குற்றவாளியாக காண்பித்ததையினால் குறித்த மாணவனுக்கும் அவனது குடும்பத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தமக்கிருக்கும் அதிகாரங்களை பொலிஸார் துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துறையாடல் ஒன்றின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொட்டதெனியாவயின் சிறுமி சேயா, பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தமையானது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதற்கு அதிகபட்சமாக மரண தண்டணையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நீதியமைச்சுக்கு நாம் மகஜர் ஒன்றை கையளித்திருக்கிறோம்.
அவ்வாறே குறித்த கொடூர கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின்பேரில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டனர். குற்றமற்ற குறித்த மாணவனின் மடிக்கணினியில் நீலப்படங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த மாணவன் குற்றமற்றவன் என்பது இப்போதைக்கு தெளிவாகியிருக்கிறது.
பொலிசாருக்கு சந்தேகத்தின்பேரில் யாரையும் கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது. இதனை பயன்படுத்தியே ஒரு அப்பாவி மாணவன் கைது செய்யப்பட்டார். குறித்தமாணவன் கைது செய்யப்பட்டமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பொலிஸார் பொறுப்பற்ற முறையிலேயே உறுதிப்படுத்தப்படாத அந்த செய்தியை வெ ளியிட்டனர். இது பொறுப்பற்ற செயலாகும்.
பொலிஸாரின் இந்நடவடிக்கையினால் குறித்த மாணவன் அபகீர்த்திக்குள்ளாகியுள்ளான். குறித்த மாணவனின் மானம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனால் அவனது குடும்பத்துக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பொலிஸார் பொறுப்பேற்க வேண்டும்.
சேயாவுக்கு அநியாயமிழைக்கப்பட்டது போற்று குறித்த மாணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அம் மாணவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் . அத்தோடு இதனோடு தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் பொலிஸார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கும் போது மிகக்கவனமாக நடந்து கொள்ளவேண்டும். பொலிஸ் சட்டங்கள் தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago